Header Ads

கினிகத்தேனையில் வீட்டின் மீது விழுந்த பாரிய கருங்கல்

வீடு சேதம்;பெண்ணொருவருக்கு காயம்

மலையக பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் பெய்கின்ற கடும் மழை காரணமாக கினிகத்தேனை பிட்டவல கீ கியனாகெதர கிராம பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் (04) இரவு பாரிய கருங்கல்லொன்று சரிந்து விழுந்துள்ளதால் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வீட்டின் இரண்டு அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த சில பொருட்கள் சேதமாகியுள்ளன. சுவர்களும் இடிந்து விழுந்துள்ளன.

இச் சம்பவ இடம்பெறும் போது வீட்டில் ஆறு பேர் இருந்துள்ளனர்.

வீட்டிலிருந்தவர்கள் பாதுகாப்பாக அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு தற்போது உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும் சம்பவம் ஏற்படும் போது, சிறு குழுந்தையோடு இருந்த தாய் காயங்களுக்குள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவ இடத்தை கினிகத்தேனை பொலிஸார் நேரடியாக வந்து பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை கிராம சேவகரூடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ஹற்றன் சுழற்சி நிருபர்

Wed, 01/06/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.