சீனாவில் 7 நாட்களாக தினசரி நோய்த்தொற்று 100க்கும் மேல்

சீனாவில் புதிதாக 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அதன் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 7 நாட்களாக தினந்தோறும் அங்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 106 பேர் உள்ளூரில் பாதிப்புக்கு ஆளாகியவர்கள். அவர்களில் 43 பேர் ஜிலின் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், 35 பேர் ஹெபேய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பெய்ச்சிங்கில் ஒருவருக்கும், ஹெய்லோங்ஜியாங் பகுதியில் 27 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதியானது. சீனாவில் கடந்த சில நாட்களாக மில்லியன் கணக்கானோர் முடக்கநிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வடக்கில் உள்ள நகரங்களில் பெரிய அளவிலான தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வரும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதால், நோய்ப்பரவல் நிலவரம் மேலும் மோசமடையும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

Wed, 01/20/2021 - 15:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை