மத்திய மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது

- இதுவரை 10 பேர் மரணம்

மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2166 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி கண்டி மாவட்டத்திலில் 1365 பேர் இதுவரை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மேலும் நுவரெலியா மாவட்டத்தில் 628 தொற்றாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 628 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கொவிட்-19 தொற்றாளர்கள் அக்குறனை சுகாதாரப் பிரிவில் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலிய மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கொவிட்-19 தொற்றாளர்கள் அம்பகமுவ பிரிவில் பதிவாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை பிரதேச செயலகப் பிரிவில் அதிக எண்ணிக்கையாக 35 கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்று (05) காலை 6.00 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாகாணத்திற்குள் மொத்தம் 37 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன. அதன்படி கண்டியிலில் 09 பேரும் நுவரெலியாவில் 15 பேரும் மாத்தளையில் 13. பேரும் புதிய தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

மேலும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலேயே கொரோனா தொற்று காரணமாக அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கண்டிமாவட்டத்தில் இதுவரை 9 பேரும் மாத்தளை மாவட்டத்தில் ஒருவருமாக 10 பேர் உயிரந்துள்ளனர்.

(எம்.ஏ.அமீனுல்லா)
 

Wed, 01/06/2021 - 14:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை