கொவிட்-19: நிபுணர்கள் குழு ஜனவரி 14இல் சீனா பயணம்

கொவிட்–19 தொற்றின் மூலம் பற்றி விசாரணை நடத்துவதற்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர் குழு வரும் ஜனவரி 14 ஆம் திகதி சீனா வரவிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்த நிபுணர் குழு ஜனவரி ஆரம்பத்தில் சீனா செல்லவிருந்த நிலையில் அதற்கு சீன நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் புதிய திகதியை அறிவித்திருக்கும் சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு, அந்தக் குழு பயணம் செய்யவிருக்கும் இடங்கள் குறித்த விபரத்தை வெளியிடவில்லை.

கொரோனா பெருந்தொற்று 2019 பிற்பகுதியில் மத்திய சீன நகரான வூஹானில் ஆரம்பமானது. அங்குள்ள கடல் உணவுச் சந்தை ஒன்றிலேயே முதலாவது தொற்றுச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தத் தொற்று எவ்வாறு தோன்றியது என்பது குறித்தே 10 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வுகளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 01/12/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை