பெப்ரவரி முதல் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை

சதோச மற்றும் கூட்டுறவுக் கடைகள் ஊடாக ஏற்பாடு -பந்துல

அரிசி, பருப்பு, சீனி உட்பட 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை எதிர்வரும் பெப்ரவரி முதல் உத்தரவாத விலையில் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் மற்றும் கூட்டுறவுக் கடைகள் மூலம் மேற்படி பத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் உத்தரவாத விலையில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க அரிசி, பருப்பு, சீனி, கோதுமை மா, ரின்மீன், நெத்தலி, வெங்காயம், உருளைக்கிழங்கு, முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகிய 10 அத்தியாவசிய பொருட்களையே உத்தரவாத விலைக்கு மக்களுக்கு பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடி இறக்குமதியாளர்களின் சிறந்த தரமான அத்தியாவசிய உணவுப் பொருட்களே உத்தரவாத விலைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவற்றை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 6 மாத காலத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அது தொடர்பான பணிப்புரைகளை வழங்கி யுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 01/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை