PCR மேற்கொள்ள மேலும் 10 மருத்துவமனைகளுக்கு அனுமதி

டாக்டர் சமன் ரத்னாயக்க தெரிவிப்பு

பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்கும் வகையில் மேலும் 10 ஆஸ்பத்திரிகளுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளாந்தம் 20,000 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. நாட்டில் தற்போது 13 ஆயிரத்துக்கும் 14 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளாந்தம் PCR மேற்கொள்ள மேலும்...

மேற்கொள்ளப்படுகின்றன. அதனை 20,000 ஆக அதிகரிப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது. அது தொடர்பில் சுகாதார அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் சமன் ரத்னாயக்க தெரிவிக்கையில்;

பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக 05 அரச மருத்துவமனைகளுக்கும் மேலும் 05 தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகளவு வைரஸ் தொற்று நோயாளர்களை தினமும் இனங்காணும் வகையில் 20,000 பிசி ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதே சுகாதார அமைச்சின் நோக்கமாகும்.

அதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 12/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை