வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

சம்மாந்துறை பிரதேச செயலக கமநல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட பெருமளவான நெற்செய்கை வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதத்திற்குள்ளாக்கப்பட்டுள் ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்று(07) அதிகாலை பெய்த தொடர்ச்சியான அடைமழையினால் சம்மாந்துறை கமநல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட பெரியவெளிக் கண்டம், மயிலோடை கண்டம், பனிச்சங்கேணிக் கண்டம், வெட்டுக்காடு உட்பட சுமார் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட ஹெக்டர் வயல்காணிகள் வெள்ளக்காடாக வெள்ளத்தில் மூழ்கி அழிந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

விதைத்து ஒரு மாதங்களுக்குள்ளேயான வயல் நிலங்களுக்குள் வெள்ளநீர் தேங்கி நிற்பதனால் நெற்பயிர் விதைகள் அழுகியிருப்பதாகவும், மீளவும் செலவு செய்து விதைக்க வேண்டிய நிலையும் உருவாகியிருப்பதாகவும் விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.

நெற்செய்கைகயினை பிரதான ஜீவனோபாயமாக மேற்கொள்ளும் சம்மாந்துறை பிரதேச விவசாயிகளின் வயல் காணிகளின் சேத அழிவு கருதி உரிய நிவாரணங்களை பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள், உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

(மண்டூர் குறூப் நிருபர்)

Tue, 12/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை