சபரிமலை ஸ்ரீ சாஸ்தாபீடத்தில் மஹா சத்ரு சம்ஹார ஹோமம்

சபரிமலை ஸ்ரீசாஸ்தா பீடத்தின் 20வது நாள் மகர​​ஜோதிப் பெருவிழாவில் இன்று மாலை 5 மணி முதல் விஷேட திரவ்ய அபிஷேகம், மஹா சங்காபிஷேகம், பதினெட்டாம் படி பூஜை வழிபாடுகளுடன் சர்வதேச இந்து மத குருபீடாதிபதி, சபரிமலைக் குரு முதல்வர் ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ  சிவாச்சார்யார் தலைமையில் மஹா சாஸ்தா சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெறும். உலகில் பரவி வரும் கொரோனாவைரஸ் நோயிலிருந்து மக்கள் அனைவரும் விடுபட்டு, சந்தோஷமாக இயல்பு வாழ்வு வாழவும், இறை அருளாசி வேண்டி கலியுகத்தின் காந்தமலை ஜோதியாகிய சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமியை வேண்டி மஹா சாஸ்தா சம்ஹார ஹோமத்தில் 108 விஷேட திரவ்யங்களும், அஷ்டாதச 18 வகையான உபசார ஹோமங்கள் நடைபெற்று மஹா பூர்ணாகுதியுடன் விஷேட 18ம் படி தீபாராதனையும் இடம்பெறும்.

 

Sat, 12/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை