புதுவகை கொரோனா திரிபு அமெரிக்காவுக்கு பரவியது

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட மரபணு மாற்றமடைந்த புதிய வகை வீரியமிக்க கொரோனா தொற்று அமெரிக்காவிற்கும் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொலராடோ மாநிலத்தின் எல்பர்ட் கவுன்டியைச் சேர்ந்த 20 வயது இளைஞருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு அக் கொரோனா திரிபு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு இத்தகைய கொரோனா உறுதியாகியிருப்பது இதுவே முதல்முறையாகும். பயண பின்னணி இல்லாத அந்த நபருக்கு  அத்தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் அவருக்கு எப்படி அத்தொற்று பாதித்தது என கண்டுபிடிப்பது அதிகாரிகளுக்கு சவாலான காரியமாக உருவெடுத்துள்ளது. இதேபோன்று அமெரிக்காவில் மேலும் பலர் கொரோனா திரிபினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் 19 மில்லியனுக்கும் அதிமான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 337,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

முந்தையதை விடவும் கொரோனா வைரஸின் புதிய திரிபு வேகமாக பரவக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அதனால் உயிராபத்து அதிகம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

Thu, 12/31/2020 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை