யெமன் விமான நிலைய குண்டுத் தாக்குதலில் 26 பேர் பலி
யெமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
யெமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரச படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இடம்பெற்று வருகிறது.
அரச படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. அதேவேளை ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
சவூதி ஆதரவுடன் புதிதாக அமைக்கப்பட்ட யெமன் அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கம் அமைச்சர்கள் உள்ளடங்கிய விமானமொன்று சவூதி அரேபியாவிலிருந்து யெமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்திற்கு நேற்று (30) வந்திறங்கி ஒரு சில நிமிடங்களில் இக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில், இத்தாக்குதலை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களே மேற்கொண்டுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் இத்தாக்குதலில் தமது அமைச்சரவையிலுள்ள எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
We assure our ppl that all cabinet members r safe, &cowardly terrorist attack by Iran-backed Houthi militia on Aden airport will not deter us fm our duty & our life isn’t more valuable than other Yemenis.
May Allah have mercy on souls of martyrs, &wish fast recovery 4injured— معمر الإرياني (@ERYANIM) December 30, 2020
இத்தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் அடிப்படையில், ஏடன் விமான நிலையத்தில் பாரிய குண்டுவெடிப்பொன்று இடம்பெறுகின்றது. இதன்போது விமான நிலையத்திலிருந்த பயணிகள் அங்கமிங்கும் தப்பியோடுகின்றனர்.
This is the moment explosions and gunfire were heard at Yemen's Aden airport shortly after a plane carrying a new unity government arrived from Saudi Arabia. Read more: https://t.co/Bzq2Xqc1y7 pic.twitter.com/NJukRwkWg1
— Al Jazeera English (@AJEnglish) December 30, 2020
இக்குண்டுவெடிப்பு தாக்குதலில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புதிதாக அமைந்துள்ள அரசை சீர்குலையச் செய்யவே ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தககுதலை நடத்தியுள்ளதாக யெமன் அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
Watch: Likely Missile attack at Aden Airport in Yemen today pic.twitter.com/JCZVjX5cdN
— Wars on the Brink (@WOTB07) December 30, 2020
from tkn
Post a Comment