2021 புதுவருடம்; உற்சவங்கள், விருந்துபசாரங்கள் நடத்தி புதிய கொத்தணிகள் உருவாக்க வேண்டாம்

- சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

2021 புது வருடம் பிறப்பதோடு வழமையாக ஏற்பாடு செய்யும் உற்சவங்கள் மற்றும் விருந்துபசாரங்களை நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் நிலையில் புதிய கொத்தணிகள் உருவாவதை தவிர்க்கும் வகையிலேயே சுகாதார அமைச்சு நாட்டுமக்களுக்கு மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளது

கடந்த வருடத்தைப் போன்றுஉற்சவங்கள் மற்றும் கொண்டாட்டங்களை நடத்த வேண்டாமென்றும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுமாறும் அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அது தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர்,விசேட மருத்துவ நிபுணர் சுதத்சமரவீர,

எதிர்வரும் இரண்டு தினங்களும் மக்கள் உற்சவங்கள் மற்றும் விருந்துபசாரங்களை நடத்தும் நாட்களாகும்.

எனினும் அதற்கான சூழ்நிலை நாட்டில் தற்போது கிடையாது. அன்றாடம் நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில் அது போன்ற நிகழ்வுகளை நடத்துவது பொருத்தமானதல்ல.

அண்மைக் காலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு உற்சவங்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.

அதற்கிணங்க இம்முறை புதுவருடத்தை கொரோனா வைரஸிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில் மக்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்
Thu, 12/31/2020 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை