ஜெர்மனியில் கொரோனா தொற்று உச்சம்: பொது முடக்கநிலை தீவிரம்

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளதை முன்னிட்டு கடுமையான முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அவசிய சேவை வழங்காத கடைகளுடன் பாடசாலைகளையும் மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்திலிருந்து செயல்பாடுகளை நிறுத்திக்கொண்ட உணவகங்கள், மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

கிறிஸ்மஸை முன்னிட்டு பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கடைகளுக்குச் சென்றதே வைரஸ் பரவல் அதிகரித்ததற்குக் காரணம் என்று ஜெர்மானி அரச தலைவர் ஏங்கலா மெர்க்கல் தெரிவித்தார்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட முடக்கநிலை அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை நடப்பில் இருக்கும். எனினும், இம்மாதம் 24ஆம் திகதியிலிருந்து 26ஆம் திகதி வரை அது தளர்த்தப்படும்.

பொதுமக்கள் அதிகபட்சம் 4 பேர் வரை கிறிஸ்மஸுக்குத் தங்கள் வீடுகளுக்கு வரவழைக்கலாம்.

ஜெர்மனியில் நேற்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,728 ஆக அதிகரித்திருந்ததோடு மேலும் 952 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை ஜெர்மனியில் புதிய உச்சமாக உள்ளது.

எதிர்வரும் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை ஒட்டி ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை இறுக்கி உள்ளன. பிரான்ஸ் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருப்பதோடு இத்தாலியில் தினசரி உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் கிறிஸ்மஸ் விடுமுறையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு ஆலோசித்து வருகிறது.

Thu, 12/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை