உயர் பதவியில் அதிக பெண்களை நியமித்ததற்கு பிரான்ஸில் அபராதம்

பெண்களை மிதமிஞ்சிய எண்ணிக்கையில் உயர் பதவிகளில் அமர்த்தியதற்காக பாரிஸ் நகர அதிகாரிகளுக்கு சுமார் 150,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு உயர் பதவியில் அதிகமான பெண்களைப் பணி அமர்த்தியதால் பாரிஸ், பாலினச் சமத்துவத்தை மீறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் காலக்கட்டத்தில் 69 வீதமான பெண்கள் உயர் பதவிகளில் இருந்தனர். அதனால் பிரான்ஸ் பொதுச்சேவை அமைச்சு பாரிஸ் நகருக்கு அபராதம் விதித்தது.

அமைச்சின் அந்த முடிவுக்கு பாரிஸ் நகர மேயர் அன் ஹடல்கோ வேடிக்கையாக பதிலளித்தார்.

அபராதம் விதித்த செய்தியைக் கேட்டபோது, தமக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்ததாக அவர் கூறினார்.

இருப்பினும் அமைச்சின் முடிவுக்கு அவர் கடுமையான கண்டனம் தெரிவித்தார். இது மிகவும் ஆபத்தானது, நியாயம் இல்லாதது, பொறுப்பற்றது என்று ஹடல்கோ சாடினார்.

துணை மேயர்களோடும் தம்மோடு பணிபுரியும் அனைத்துப் பெண்களோடும் இணைந்து நேரில் சென்று, அரசாங்கத்திடம் அபராதத்துக்கான காசோலையை வழங்கப்போவதாக அவர் கூறினார்.

பிரான்ஸின் நிர்வாகப் பதவிகளில், ஒரு பாலினத்தைச் சேர்ந்தவர்கள் 60 வீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 12/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை