திருமணப் பொருத்தம் பார்க்க ஜப்பான் அரசு நிதி ஒதுக்கீடு

நாட்டு மக்களுக்கு பொருத்தமான காதல் ஜோடியை தேர்வு செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு திட்டம் ஒன்றுக்கு ஜப்பான் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. நாட்டில் வீழ்ச்சி கண்டிருக்கும் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் முயற்சியாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனைவரையும் ஜோடி சேர்க்கும் இந்தத் திட்டத்தை ஏற்கனவே பயன்படுத்தும் அல்லது அறிமுகம் செய்யும் உள்ளூர் அரசுகளுக்கு அடுத்த ஆண்டு தொடக்கம் இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.

ஜப்பானில் கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை சாதனை அளவுக்கு 865,000 ஆக வீழ்ச்சி கண்டிருந்தது.

முதிர்ச்சி அடைவோர் எண்ணிக்கை அதிகரித்த நாடாக இருக்கும் ஜப்பான், உலகின் மிகக் குறைவான பிறப்புவீத எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.

இதன் புதிய முயற்சியாக ஜப்பான் அரசு இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

இதன்படி நாட்டில் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக உள்ளூர் நிர்வாகங்களுக்கு 2 பில்லியன் யென்களை ஜப்பான் அரசு அடுத்த ஆண்டுக்கு ஒதுக்கியுள்ளது.

ஜப்பான் மக்கள் தொகை 2017 இல் 128 மில்லியனாக உச்சத்தை தொட்டதோடு இந்த நூற்றாண்டு இறுதியில் அது 53 மில்லியனாக வீழ்ச்சி காணும் என புள்ளிவிபரம் காட்டுகிறது.

Wed, 12/09/2020 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை