உலக வர்த்தக நிறுவனத்திடம் சீனா மீது முறையிடும் ஆஸி.

அவுஸ்திரேலியாவின் பார்லி தானிய இறக்குமதிக்கு, அதிகமான தீர்வை விதிக்கும் சீனாவின் முடிவை மறுஆய்வு செய்யக் கோரி உலக வர்த்தக நிறுவனத்திடம் அவுஸ்திரேலியா அதிகாரபூர்வமாக முறையிடவுள்ளது.

அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் சைமன் பர்மிங்ஹாம் அதனைத் தெரிவித்தார். அவுஸ்திரேலிய பார்லி தானியம் சீனாவுக்குள் மிதமிஞ்சிய அளவில் இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறி சீனா அதற்கான தீர்வையை உயர்த்த முடிவெடுத்தது.

அதுகுறித்தும் ஏனைய தீர்வைகள் குறித்தும் முறையான கலந்தாய்வுக்கு அவுஸ்திரேலியா அழைப்பு விடுக்கும் என்று வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார். இவ்வாண்டின் மே மாதம் சீனா, ஆஸ்திரேலியாவின் பார்லி தானிய இறக்குமதிக்கு மொத்தம் 80 வீத தீர்வை விதித்தது.

பார்லி உற்பத்திக்கு உள்நாட்டில் மானியம் வழங்கப்படுவதாகச் சீனா கூறும் குற்றச்சாட்டை அவுஸ்திரேலியா மறுத்து வருகிறது. சீனா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையே அரசியல் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் அவுஸ்திரேலியாவின் பால் பொருட்கள், இறைச்சி, வைன் மற்றும் ஏனைய பொருட்கள் மீது தடை அல்லது அதிக தீர்வையை சீனா விதித்துள்ளது.

 

Thu, 12/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை