பாகிஸ்தானில் பலாத்காரத்திற்கு எதிரான புதிய சடத்தியத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

பாகிஸ்தான் ஜனாதிபதி அரிப் அல்வி பலாத்காரத்திற்கு எதிரான புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். புதிய சட்டம் மூலம், பலாத்காரம் தொடர்பான வழக்குகளை வேகமாக விசாரிக்க முடியும்.

பாதிப்புக்கு ஆளானவரின் அடையாளம் வெளியிடப்பட மாட்டாது. பாலியல் குற்றச்சாட்டு குறித்த ஆரம்பக்கட்டப் புலனாய்வை நடத்த நாடெங்கும் பலாத்காரத்துக்கு எதிரான அமைப்புகள் நிறுவப்படும்.

பாலியல் பலாத்காரம் குறித்து ஒருவர் பொலிஸாரிடம் புகார் செய்த ஆறு மணி நேரத்திற்குள், அவரிடம் மருத்துவச் சோதனை நடத்தப்படுவதைப் புதிய சட்டம் கட்டாயமாக்குகிறது. மேலும், நாட்டில் பாலியல் ரீதியான குற்றம் புரிந்தவர்களின் விவரங்களைக் கொண்ட தனிப் பதிவேடுகளும் உருவாக்கப்படும்.

புதிய சட்டம், உடனடியாக நடப்புக்கு வரும். இருப்பினும் அது பாராளுமன்றத்தில் இன்னும் 3 மாதத்திற்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

புதிய சட்டத்தை பிரதமர் இம்ரான் கான் முதலில் முன்மொழிந்தார். கடந்த செப்டம்பர் மாதம் மூன்று பிள்ளைகள் முன்பு தாயார் ஒருவர் கூட்டாகச் சிலரால் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டார். அந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவுகட்ட, அரசாங்கம் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று, பெண்ணுரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர்.

Thu, 12/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை