வூஹான் வைரஸ்: செய்தி வெளியிட்டவருக்கு சிறை

சீனாவின் வூஹான் நகரில் முதல் முறை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது அது பற்றி செய்திகளை சேகரித்த சீன பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்து மோதல்கள் மற்றும் சிக்கல்களைத் தூண்டியதாக சாங் சான் என்ற ஊடகவியலாளர் மீது குற்றங்காணப்பட்டுள்ளது. செயற்பாட்டாளர்கள் மீது சீனாவில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகிறது.

முன்னாள் சட்டத்தரணியான சான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராக பல மாதங்கள் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது உடல்நிலை மோசமாகி இருப்பதாக அவரது வழங்கறிஞர்கள் தெரிவித்தனர். வூஹான் நோய்த் தொற்றுக் குறித்து செய்தி வெளியிட்டதால் சிக்கலை எதிர்கொண்ட பல செய்தியாளர்களில் ஒருவராக சான் உள்ளார்.

சீனாவில் சுதந்திர ஊடகம் இல்லை என்பதோடு இந்த வைரஸ் தொற்று குறித்த அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கும் செயற்பாட்டாளர்கள் அல்லது வெளிச்சத்திற்கு கொண்டுவருவோருக்கு எதிராக சீன நிர்வாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

சான் தனது வழக்கறிஞர்களுடன் நேற்று சங்காய் நீதிமன்றம் ஒன்றில் தோன்றினார்.

அவர் வைரஸ் தொற்று தொடர்பில் சுயாதீனமாக செய்தி சேகரிப்பதற்கு கடந்த பெப்ரவரி மாதம் வூஹான் நகரை சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது. அ

வரது இணைய நேரடி ஒளிபரப்பு மற்றும் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. இதனை அடுத்தே சீன நிர்வாகம் அவர் மீது அவதானம் செலுத்தியது. சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 12/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை