மஸ்கெலியா தனியார் பஸ்களில் அதிகளவு பயணிகளை ஏற்றுவதாக மக்கள் புகார்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் சிலவற்றில் அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும் போக்குவரத்து அமைச்சின் கட்டளையை மீறி செயல்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்பகுதியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்கள் அதிகமுள்ளனர். ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் கொண்டு செல்ல போக்குவரத்து அமைச்சர் பயண கட்டணத்தை அதிகரித்த போதும் அதிகளவு பயணிகள் இல்லை என்றால் அதிகளவு நேரம் தாமதமாகவே பஸ்ஸை நகர்த்துவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்பகுதியில் கொவிட் தொற்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்..சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மஸ்கெலியா நிருபர்

Mon, 12/28/2020 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை