சீன காணிகள் குறித்து ஜப்பான் அரசு கவலை

ஜப்பானின் பாதுகாப்பு நிலைகளுக்கு அருகில் சீனா காணி வாங்குவது இரு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான முறுகலுக்கான மற்றொரு விவகாரமாக மாறியுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த தளங்களுக்கு நெருக்கமாக இருக்கும் காணிகளின் உரிமையாளர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக விசாரிப்பதற்கு அனுமதிக்கும் சட்டங்களை ஜப்பான் அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக நிக்கெய் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பான் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் அணு உலைகள் இருக்கும் தளங்கள் இதில் அடங்குவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன நிறுவனங்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. அந்த காணிகள் உளவு பார்க்கப் பயன்படுத்தப்பட சாத்தியம் இருப்பதாக பிரிட்டன் பத்திரிகை ஒன்று தெரிவித்திருந்தது.

Wed, 12/30/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை