பதில் அதிபர்களை அதிபர்களாக நியமிக்க விரைவில் நடவடிக்கை

பதில் அதிபர்களாக செயற்படுபவர்களில் தகுதியானவர்களுக்கு அதிபர் நியமனம் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 58 வயதுக்குட்பட்ட பதில் அதிபர்களுக்கு புள்ளி வழங்கி தகுதியானவர்களை விரைவில் தெரிவு செய்ய இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், அதிபர்களை நிரந்தரமாக்குவது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், இது தொடர்பில் அமைச்சரவைக்கு விளக்கமளித்தார். சிலருக்கு ஏற்பட்ட அநீதி குறித்தும் பேசப்பட்டது. பல வருடங்களாக கஷ்டமான காலப்பகுதியில் பொறுப்பை ஏற்று செயற்பட்டு பாடசாலைகளை முன்னேற்றிய பதில் அதிபர்கள் குறித்தும் ஆராயப்பட்டது. தகைமை இருந்தும் பதவி கிடைக்காதவர்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. சிலர் 10-, 15 வருடங்களாக பதில் அதிபர்களாக உள்ளனர். 58 வயது வரையானவர்களுக்கு இதற்கான விண்ணப்பிக்க அவகாசம் வழங்கவும் அவர்களுக்கு புள்ளி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. விரைவில் தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அநீதி ஏற்படாத வகையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 12/16/2020 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை