6 வகை பிளாஸ்டிக், பொலித்தீன் வகைகளுக்கு விரைவில் தடை

- சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர

உக்கிப் போகாத சூழலுக்கு பெருமளவில் மாசு ஏற்படுத்தும் ஆறுவகை பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்படுமென குறிப்பிட்டுள்ள அமைச்சர், வர்த்தமானியில் உள்ளடக்கும் விடயங்களை வெளிப்படுத்த உள்ளதாகவும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி பெற்றுக் கொள்ளும் வகையில் அதற்கான ஆவணங்கள் சட்ட மாஅதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிருமிநாசினி கொள்கலன்களான பிளாஸ்டிக் போத்தல்கள், சில வகை பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட ஆறு வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கே தடை விதிக்கப்படவுள்ளன.

அதற்கான அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதென்றும் ஒரு வார காலத்தில் அது தொடர்பான நடவடிக்கைகள் நிறைவு பெறும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், கட்டம் கட்டமாக இந்த பிளாஸ்டிக் வகைகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து பொலித்தீன் பைகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களும் தடை செய்யப்படவுள்ளன.

கடந்த காலங்களிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இம்முறை அவற்றை கண்டிப்பாக தடை செய்வதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 12/28/2020 - 11:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை