சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

சீன, ரஷ்ய இராணுவத்துடன் தொடர்புபட்ட அந்த நாடுகளின் நூற்றுக்கும் அதிமான நிறுவனங்கள் மீது அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

58 சீன நிறுவனங்களுடன் மொத்தம் 103 நிறுவனங்கள் மீது இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு பட்டியல் இடப்பட்டிருக்கும் நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை பரிமாற்றுவதற்கு அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் அனுமதி பெற வேண்டும். இதில் சீனாவின் விமானத்துறை நிறுவனங்கள் பல உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் முன்னர் சீனா மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலேயே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பல விவகாரங்கள் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் அண்மைய ஆண்டுகளில் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 12/28/2020 - 10:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை