காசாவில் இஸ்ரேல் சரமாரித் தாக்குதல்

காசாவில் ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்திருப்பதோடு பொருட்சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக பலஸ்தீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

காசா பகுதியின் கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் உக்கிர ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் ஆறு வயது சிறுமி மற்றும் 20 வயதுகளில் உள்ள இளைஞன் ஒருவன் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் கிழக்கு பகுதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டிருப்பதோடு சிறுவர் மருத்துவமனையில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் காசாவில் இருந்து வீசப்பட்ட ரொக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Mon, 12/28/2020 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை