கொரோனா வைரஸ்: தென்கொரியாவில் தினசரி தொற்றாளர்கள் அதிகரிப்பு

தென் கொரியாவில் புதிதாகக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோர் தினசரி எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 500க்கும் மேல் பதிவாகியுள்ளது.

மூன்றாம் கட்டக் நோய்ப்பரவலைக் கட்டுபடுத்த அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். இந்நிலையில், அடுத்த வாரம் தேசிய அளவில் முக்கியப் பல்கலைக்கழகத் பரீட்சை இடம்பெறவுள்ளது.

தென் கொரியாவில் அண்மையில் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன. இருப்பினும் நேற்று புதிதாக 569 பேருக்குக் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் சோல் நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

தென் கொரிய இராணுவம் கடந்த வியாழக்கிழமை சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு இராணுவத் தளங்களில் இருந்து வெளியேற யாருக்கும் அனுமதி இல்லை. குறிப்பாக நோய் அறிகுறிகள் இன்றி பலரிடம் இந்த தொற்று பரவி இருப்பதாக கூறப்படுகிறது. குளிர் காலநிலை நோய்ப் பரவலை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Sat, 11/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை