ஐரோப்பிய மருத்துவமனைகளில் கொரோனா நோயாளர் அதிகரிப்பு

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது முறையாகத் தலைதூக்கியுள்ள வேளையில், மருத்துவமனை வசதிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸில் கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி மருத்துவமனைகளில் சுமார் 95 வீதத்திற்கு தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் நிரம்பிவிட்டன.

முதல்முறை வைரஸ் பரவியபோது ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

பிரான்ஸ் மக்களில் குறைந்தது 60 வீதத்தினர் கட்டுப்பாடுகளை மீறி நடக்கின்றனர்.

பிரான்ஸில் முடக்கநிலை அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என்று அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இத்தாலியில் கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி மருத்துவமனைகளின் 52 வீதமான படுக்கைகளில் கொரோனா நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அங்கு அத்தகைய 40 வீதமான நோயாளிகளை மட்டுமே மருத்துவமனைகள் தாங்கும்.

Sat, 11/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை