மியன்மார் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி

மியன்மார் பொதுத் தேர்தலில் ஆங் சான் சூக்கியின் ஆளும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அடுத்த அரசை அமைப்பதற்கு பொதுமான பெரும்பான்மையை பெற்றிருப்பதாக தேர்தல் முடிவுகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அடுத்த அரசை அமைப்பதற்கு பாராளுன்றத்தில் 322 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஆளும் கட்சி 346 ஆசனங்களை வென்றுள்ளது.

எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலின் ஆரம்பக் கட்ட முடிவுகளை வைத்து ஆளும் கட்சி முன்கூட்டியே வெற்றியை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிக்கு இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஒருசில நாடுகள் ஆங் சான் சூக்கியின் கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளன.

ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி உள்நாட்டில் செல்வாக்கு செலுத்தும் கட்சியாக இருந்தபோதும் ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் காரணமாக அந்தன் மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

Sat, 11/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை