வனுவாட்டு நாட்டில் முதல் கொரோனா சம்பவம் பதிவு

உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாத ஒருசில நாடுகளில் ஒன்றாக இருந்த பசிபிக் தீவு நாடான வனுவாட்டுவில் நேற்று முதல் தொற்றுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

அண்மையில் அமெரிக்காவில் இருந்து வந்து தனிமைப்படுத்தலில் இருந்த 23 வயதான இளைஞருக்கு கொவிட்–19 தொற்று இருப்பது உறுதியானதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் பசிபிக் தீவு நாடுகள் பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் தம்மை தனிமைப்படுத்திக்கொண்டன. அந்த நாடுகளின் மோசமாக சுகாதார கட்டமைப்பு இந்த வைரஸை கையாள்வதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடம் என அஞ்சப்படுகிறது. வனுவாட்டு கடந்த மார்ச் மாதம் பெருந்தொற்று காரணமாக நாட்டு எல்லைகளை மூடியது. அண்மையிலேயே கடும் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் பறக்க அனுமதி அளித்தது. ‘தற்பேதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என்பதை இந்த நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்’ என்று 300,000 மக்கள் தொகை கொண்ட வனுவாட்டு நாட்டின் பிரதமர் பொப் லோப்மன் தெரிவித்தார்.

Thu, 11/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை