வியட்நாமை தாக்கிய 12ஆவது சூறாவளியில் இருவர் உயிரிழப்பு

வியாட்நாமைப் புரட்டிப்போட்ட எடாவு சூறாவளியில் சிக்கி இருவர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியட்நாமை இவ்வாண்டு தாக்கிய 12வது சூறாவளியாக இது உள்ளது.

கனத்த மழையால், ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இன்று வரை அதிகபட்சம் 250 மில்லி மீற்றர் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சூறாவளி காரணமாக குறிப்பிட்ட சில விமான நிலையங்கள் மூடப்பட்டன. சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த மாதத்தில் வியட்நாமை உலுக்கிய ஐந்து சூறாவளிகளில் கிட்டத்தட்ட 160 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே, வம்கோ என்ற மற்றொரு சூறாவளி வலுவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை அது வியட்நாமைத் தாக்கக்கூடும்.  

Thu, 11/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை