அமெரிக்காவில் ஒரே நாளில் 200,000 பேருக்குக் கொரோனா

அமெரிக்காவில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் புதிதாக 200,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்–19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1,535 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஏழு நாட்களில் அந்நாட்டில் நாளொன்றுக்கு சராசரி நோய்த் தொற்று சம்பவங்கள் 119,238 ஆக உயர்ந்துள்ளது.

இது கடந்த செப்டெம்பர் நடுப்பகுதியில் நோய்ப் பாதிப்பில் குறைவு ஏற்பட்டிருந்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும். பென்சில்வேனியா, டென்னஸ்ஸி, கொலராடோ, நியூ மெக்சிக்கோ, மெய்ன் ஆகிய மாநிலங்களில் நாள்தோறும் வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை 25 வீதம் உயர்ந்துள்ளது. கூடுதலானோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அமெரிக்காவில் மாத்திரமன்றி ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய வட்டாரங்களிலும் நோய் கட்டுக்கடங்காமல் பரவிவருகிது.

வைரஸ் தொற்றைத் தடுக்க ஒரே வழி தடுப்பூசிதான் என்பதால் அது தொடர்பான மருத்துவ சோதனைகள் வேகமாக நடத்தப்படுகின்றன.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 10.2 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. தவிர சுமார் 240,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

Thu, 11/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை