இறந்த நட்சத்திரத்திலிருந்து வந்த சமிக்ஞை கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தின் மிக சக்திவாய்ந்த சமிக்ஞையாக கருதப்படும் 'வானொலி வேக அதிர்வு' எங்கிருந்து வந்தது என்பது பற்றி விஞ்ஞானிகள் முதல் முறை கண்டுபிடித்துள்ளனர்.

மிகக் குறுகியதும், மிக சக்திவாய்ந்ததுமான இந்த வானொலி அலைகள் அதிர்வின் சுவடுகளை கண்டறிய விஞ்ஞானிகளால் முடிந்துள்ளது. இதன்மூலம் இந்த அதிர்வு 30,000 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இறந்த நட்சத்திரம் ஒன்றில் இருந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதியே இந்த நகழ்வு இடம்பெற்றுள்ளது.

2007ஆம் ஆண்டு முதல் முறை அவதானிக்கப்பட்டது தொடக்கம் வானொலி வேக அதிர்வு தொடர்பான மர்மம் விஞ்ஞானிகள் மத்தியில் நீடித்து வருகிறது.

இந்நிலையில் வட அமெரிக்காவில் இரு சுயாதீன வானொலி தொலைநோக்கி வசதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தக் கண்டுபிடிப்பின் விபரம் ஜேர்னல் நேச்சர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

இந்த மீளதிர்வு சமிக்ஞைகள் ஏதோ ஓர் இயற்கை புலப்பாடு மூலம் உருவாவது என்று சில விஞ்ஞானிகள் கருதினாலும், வேறு சிலரோ, வேற்றுக்கிரகவாசிகளின் நடவடிக்கைகளால் இது தோன்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

Fri, 11/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை