சவூதி புலம்பெயர் தொழிலாளர் மீதான கட்டுப்பாடுகளில் தளர்வு

சவூதி அரேபியாவில் உள்ள சுமார் 10 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான சில ஒப்பந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வு கொண்டுவரப்படவிருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் தனியார் துறை தொழிலாளர்கள் தொழில் வழங்குநரின் ஒப்புதல் இன்றி தமது தொழிலை மாற்றவும் நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்படவுள்ளனர்.

'தொழில் சூழலின் செயல்திறனை மேம்படுத்த மற்றும் அதிகரிக்க' முயற்சித்திருப்பதாக சவூதி அரசு குறிப்பிட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 'கபாலா' (அனுசரணையாளர்) முறை காரணமாக தொழிலாளர்கள் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்களால் பாதிக்கப்படுவதாக உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

இந்த மாற்றத்தை வரவேற்றிருக்கும் செயற்பாட்டாளர்கள் அந்த முறையின் சில பகுதிகள் தொடர்ந்து நீடிப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வரும் என்று சவூதி மனித வளங்கள் அமைச்சு கடந்த புதன்கிழமை அறிவித்தது.

Fri, 11/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை