கொவிட்–19: அமெரிக்காவில் 100,000 புதிய தொற்றாளர்கள்

அமெரிக்காவில் ஒருநாளில் அதிகபட்சமாக கடந்த புதன்கிழமை 100,000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளாந்தம் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுபவரின் வேகமான அதிகரிப்பை கொண்டு கொரோனா கண்காணிப்புத் திட்டம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தவிர, கொரோனா வைரஸுடன் தொடர்புபட்டு கடந்த புதனன்று 1,100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா எங்கும் கொரோனா தொற்றுக் காரணமாக 50,000க்கும் அதிகமானவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு கடந்த ஒக்டோபர் ஆரம்பம் தொடக்கம் இது 64 வீத அதிகரிப்பாக உள்ளது.

தினசரி உயிரிழப்பு வேகமும் அமெரிக்காவில் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளது. எனினும் இந்த பெருந்தொற்றின் ஆரம்பக் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

அமெரிக்காவில் மொத்தம் 9.5 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 233,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இது உலக நாடுகளில் மிக உச்ச எண்ணிக்கையாகும்.

Fri, 11/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை