இறுதி லீக் போட்டியில் சன்றைசர்ஸ் வெற்றி

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் 56ஆவதும் இறுதியுமான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சன்றைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியுள்ளது.

இந்தப் போட்டி, சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றதுடன் இதில் 10 விக்கெட்டுகளால் சன்றைசர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

இந்தப்போட்டியில், சன்றைசர்ஸ் அணி நாண யச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 150 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய சன்றைசர்ஸ் அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் ரித்தினம் சகா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தில் வெற்றியை சுவீகரித்தது.

இதில், டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களையும் சகா 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், ஐ.பி.எல். தொடரின் பிளே ஓஃப் சுற்றுக்கு முப்பை இந்தியன்ஸ், டெல்லி ஹப்பிடல்ஸ், சன்றைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Thu, 11/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை