எல்லை கடந்த வட கொரியர் தெற்கு இராணுவத்தால் கைது

தென் கொரிய இராணுவம் எல்லையைக் கடந்து வந்த வட கொரிய ஆடவரைத் தடுத்துவைத்துள்ளது. தென் கொரியக் கண்காணிப்புக் கட்டமைப்பின் மூலம் ஆடவர் எல்லையைத் தாண்டியது தெரியவந்தது. 10 மணி நேரத் தேடலுக்குப் பின்னர் கிழக்கிலுள்ள கோசியோங் நகரில் அந்த ஆடவரை அதிகாரிகள் பிடித்தனர். அவர் இராணுவச் சீருடை அணிந்திருக்கவில்லை. எனவே அவர் சாதாரணக் குடிமகனா, வட கொரிய இராணுவ அதிகாரியா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

தென் கொரியா இரு கொரியாக்களுக்கும் இடையில் உள்ள பகுதிக்குச் சுற்றுலாக்களை அண்மையில் ஆரம்பித்தது. அந்த இடம் இரு கொரியாக்களும் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கான தளமாகவும் இருந்துவந்தது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வட கொரியாவில் ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியதும், அந்தச் சுற்றுலாக்கள் நிறுத்தப்பட்டன. பின் கொரோன வைரஸ் தொற்றால் அந்த இடம் சுற்றுலாக்களுக்குத் திறந்துவிடப்படாமல் இருந்தது.  

 

Thu, 11/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை