கொவிட்–19: தென் கொரியாவில் கட்டுப்பாடுகளை இறுக்க திட்டம்

தென் கொரியாவின் இரண்டு வட்டாரங்களுக்கு வைரஸ் பரவல் தொடர்பில் முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடைவெளி தொடர்பிலான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவது குறித்தும் அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்துவருகிறது.

தென் கொரியாவில் புதிதாகச் சுமார் 200 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதையடுத்து அந்தத் தகவல்கள் வெளிவந்தன. கடந்த செப்டெம்பர் ஆரம்பம் தொடக்கம் அந்நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை 200 ஐ தாண்டி இருப்பது இதுவே முதல்முறையாகும்.

தலைநகர் சோல், நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள காங்வோன் வட்டாரம் ஆகியவற்றுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாய்த் தென் கொரியப் பிரதமர் கூறினார்.

நெரிசல் அதிகமுள்ள வட்டாரங்களில் தனிப்பட்ட ஒன்றுகூடல்கள், உணவகம் போன்ற பொது இடங்களில் கூடுதல் போன்றவற்றால் வைரஸ் பரவல் அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. 

தென் கொரியாவில் இதுவரை பதிவான கொரோனா தொற்று சம்பவங்கள் 28,769 ஆக அதிகரித்திருப்பதோடு 494 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tue, 11/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை