‘ஹைப்பர்லூப்’ பயணிகள் சோதனை ஓட்டம் வெற்றி

பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய ஹைப்பர்லூப் , முதன்முறையாக பயணிகளுடன் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ரிச்சர்ட் பிரான்சனின் வெர்ஜின் ஹைப்பர்லூப், லாஸ் வேகாசில் உள்ள அதன் சோதனை தடத்தில் மணிக்கு 172 கிலோ மீற்றர் வேகத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் அதில் பயணம் செய்தனர். காந்தப்புல தடத்தின் மீது அந்தரத்தில் காற்றில்லா குழாய்களில் அமைக்கப்படும் பெட்டகங்களில் அதிகவேக பயணம் செய்வதே ஹைபர்லூப் எனப்படுகிறது.

லொஸ் ஏஞ்சல்சில் இருக்கும் ஹைப்பர்லூப் நிறுவனம் மணிக்கு 966 கிலோ மீற்றர் வேகத்தை எட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது ஜெட் விமானத்தை விட இரு மடங்கு அதிவேக ரயில்களை விட நான்கு மடங்கு வேகம் கூடியதாகும்.

Tue, 11/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை