தேர்தல் முடிவை எதிர்த்து போராட டிரம்ப் உறுதி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதாக பதவியில் இருக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளின்படி வெற்றி பெறுவதற்கு தேவையான 270 தேர்தல் தொகுதிகளை ஜோ பைடன் கைப்பற்றியுள்ளார். எனினும் குறுகிய இடைவெளியில் போட்டி இருந்து வந்த ஜோர்ஜியாவில் வாக்குகள் மீண்டும் எண்ணப்படவிருப்பதோடு விஸ்கோன்சினிலும் வாக்குகளை மீண்டும் எண்ணும் முயற்சியில் டிரம்ப் தரப்பு ஈடுபட்டுள்ளது.

தேர்தல் மோசடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான குற்றச்சாட்டை நிரூபிக்க அவர் இதுவரை எந்த ஆதாரமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பைடன் வெற்றி பெற்றது உறுதியான பின்னர் டிரம்ப் நேரடியாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடாதபோதும், ‘பைடன் பொய்யாகத் தம்மை வெற்றியாளராக முன்னிறுத்த அவசரப்படுவது ஏன் என்பது அனைவருக்குமே தெரியும்’ என்று குறிப்பிட்டிருந்தார். தேர்தல் இன்னும் முடிந்துவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை