அமெ. செனட் சபைக்கு ஜனவரியில் மறுவாக்கு

அமெரிக்க செனட் சபையின் பெரும்பான்மை எந்தக் கட்சியைச் சேரும் என்பது அடுத்த ஆண்டே தெரிய வரும்.

ஜனநாயகக் கட்சியோ குடியரசுக் கட்சியோ செனட் சபையில் தற்போது பெரும்பான்மை பெறவில்லை. இரு கட்சிகளுமே இதுவரை முறையே 48 இடங்களைப் பெற்றுள்ளன.

ஜோர்ஜியா மாநிலத்தின் இரண்டு இடங்களுக்கான போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி இடம்பெறும். வடக்கு கரோலினா, அலாஸ்கா ஆகிய மாநிலங்களின் செனட் உறுப்பினர்களுக்கான தெரிவு எப்போது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.  100 இடங்களைக் கொண்ட அமெரிக்க செனட்டில் குடியரசுக் கட்சி 53 –47 என பெரும்பான்மை பெற்றிருந்த நிலையில் போட்டி நிலவும் நான்கு இடங்களையும் வெல்ல ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி எதிர்பார்த்துள்ளது.

 

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை