அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோர்ஜியா மாநிலத்தில் மீண்டும் வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்

 

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாக்குகள் கையால் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் இருவருக்கும் இடையே அந்த மாநிலத்தில் கடும் போட்டி நிலவியது.

அங்கு பதிவான சுமார் 5 மில்லியன் வாக்குகளில் டிரம்ப்பை விட பைடன் கிட்டத்தட்ட 14 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்றார்.

இருவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பதால், வாக்குகளை மீண்டும் எண்ண முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி வரும் 20ஆம் திகதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

தேர்தலில் பைடனின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆனால், குடியரசுக் கட்சி வேட்பாளராகக் களமிறங்கிய ஜனாதிபதி டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறார்.

தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக ஆதாரம் எதையும் முன்வைக்காமல் அவர் குற்றஞ்சாட்டி வருகிறார்.

 

Fri, 11/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை