உலகில் நீண்டகால பிரதமரான பஹ்ரைனின் இளவரசர் மரணம்

 

உலகில் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்த பஹ்ரைனின் இளவரசர் கலீபா பின் சல்மான் அல் கலீபா தனது 84 ஆவது வயதில் காலமானார்.

1971 இல் பஹ்ரைன் சுதந்திரம் பெற்றது தொடக்கம் இளவரசர் கலீபா அந்நாட்டு பிரதமராக பதவி வகித்தார். அவர் அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

அவர் மன்னர் ஹமத்தின் மாமனார் என்பதோடு மன்னர் குடும்பத்தின் செல்வாக்கு மிக்க ஒருவராக இருந்தார்.

2011 அரபு வசந்தத்தின்போது பஹ்ரைனில் தோல்வி அடைந்த ஜனநாயக ஆதரவு போராட்டத்தில் பிரதமரை பதவி விலகும் படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பஹ்ரைனில் சுன்னி முஸ்லிம் மன்னர் குடும்பத்திற்கு எதிராக பெரும்பான்மை ஷியா முஸ்லிம் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீபா புதிய பிரதமராக மன்னர் நியமித்துள்ளார்.

 

Fri, 11/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை