சவூதி அரேபியாவில் கல்லறையில் குண்டுத் தாக்குதல்: பலரும் காயம்

சவூதியின் ஜித்தா நகரில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பங்கேற்ற முதலாம் உலகப் போர் ஞாபகார்த்த நிகழ்வின்போது குண்டு வெடித்து பலரும் காயமடைந்துள்ளனர்.

முஸ்லிம் அல்லாதோரின் கல்லறை ஒன்றிலேயே கடந்த புதன்கிழமை காலை இந்த குண்டு வெடித்ததாக பிரான்ஸ், கிரேக்கம், இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கத் தூதரகங்கள் தெரிவித்துள்ளன.

இது ஒரு கோளைத்தனமான தாக்குதல் என்று அந்தத் தூதரகங்கள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் கண்டித்துள்ளன. கிரேக்க தூதரக அதிகாரி மற்றும் சவூதி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்திருப்பதாக சவூதி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாக மக்கா மாகாண அரசு குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் இஸ்லாமியவாத தீவிரவாதியால் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பிரான்ஸின் நீஸ் நகரில் மூவர் கத்திக் குத்து தாக்குதலால் கொல்லப்பட்ட அதே தினத்தில் ஜித்தாவில் இருக்கும் பிரான்ஸ் துணைத் தூதரக காவலர் ஒருவரும் சவூதி ஆடவர் ஒருவரின் கத்திக் குத்து தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தார்.

 

Fri, 11/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை