‘ஐஸ் பக்கெட்’ சவாலின் செயற்பாட்டாளர் மரணம்

உலகெங்கும் பிரபலமான நிதி சேகரிப்புக்கான ‘ஐஸ் பக்கெட்’ சவாலுக்கு காரணமானவர்களில் ஒருவரான பாட்ரிக் குயின் தனது 37 ஆவது வயதில் காலமானார்.

நியூயோர்க் நகரைச் சேர்ந்த குயின், 2013 தொடக்கம் குணப்படுத்த முடியாத நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார் என்பதை அவரது ஆதரவாளர்கள் அவரின் போஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

இந்த ஐஸ் பக்கெட் சவால் மூலம் நரம்புத் தளர்ச்சி தொடர்பான ஆர்ச்சிகளுக்காக 220 மில்லியல் டொலர் நிதி திரட்டப்பட்டது. ஐஸ் பக்கெட் சவால் குயினினால் ஆரம்பிக்கப்படாதபோதும் 2014 இல் சமூக ஊடகத்தில் பிரபல அடைவதற்கு அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உதவினர்.

உலகில் மில்லியன் கணக்கானோர் இந்த சவாலை ஏற்றனர். ஐஸ் கட்டி போன்ற குளிர்ந்த நீர் நிரம்பிய ஒரு வாளித் தண்ணீரை உடலின் மீது ஊற்றி, நரம்புத் தளர்ச்சி தொடர்பான ஆய்வுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்பதுவே இந்த சவாலாகும். டொம் குரூஸ், ஸ்டீவன் ஸ்பீல்பர்க், பில் கேட்ஸ், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் உட்பட உலகின் பல பிரபலங்கள் சவாலில் பங்கெடுத்தனர்.

Tue, 11/24/2020 - 16:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை