வத்தளை தொழிற்சாலை ஒன்றில் 49 பேருக்கு கொரோனா தொற்று

- தற்காலிகமாக மூடப்பட்டது தொழிற்சாலை

வத்தளை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலை ஒன்றில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வத்தளை சுகாதார வைத்திய வலயத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் வருண அபேசேகர  இவ்விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளதாவது,​

குறித்த நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர். இதில் 120பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனைகள் முடிவில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கைத்தொழிற்சாலை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்குள் ​மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் அடிப்படையில் வத்தளை பகுதியைச் சேர்ந்த 75 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sun, 11/01/2020 - 10:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை