ஏழை நாடுகளுக்கு 2 பில். தடுப்பூசிகள் விநியோகம்

அடுத்த ஆண்டு சுமார் 2 பில்லியன் கொவிட்–19 தடுப்பூசிகள் ஏழை நாடுகளுக்கு அனுப்பப்படும் என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.

தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உலகத் தலைவர்கள் கூறிவரும் நிலையில் யுனிசெப் இதனைத் தெரிவித்தது. ஏழை நாடுகளுக்குக் கப்பல்கள், விமானங்கள் மூலம் தடுப்பூசிகள் சென்றடையும்.

350க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களுடனும் கப்பல் நிறுவனங்களுடனும் இணைந்து தடுப்பூசிகளின் விநியோகம் குறித்துப் பேசிவருவதாக யுனிசெப் தெரிவித்தது.

கொவிட்–19 வைரஸ் தொற்றுச் சூழலுக்கு முன்னர், மற்ற தடுப்பூசிகளின் விநியோகத்தில் வேறுபாடுகள் காட்டப்பட்டன என்றும் அதனால் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டன என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியது.

தற்போது வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசித் தயாரிப்பில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

 

Tue, 11/24/2020 - 12:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை