கொவிட்–19: பிரான்ஸில் 850க்கும் மேற்பட்டோர் தினசரி உயிரிழப்பு

பிரான்ஸில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைவோரின் எண்ணிக்கை 850ஐக் கடந்துள்ளது.

கிருமித்தொற்றுக்காக மருத்துவமனை களில் சிகிச்சை பெறுவோர் எண்ணி க்கை, கடந்த 9 நாட்களில் ஐந்தாவது முறையாக ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. நேற்று பிரான்ஸில் 36,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரான்சின் அவசர சிகிச்சை பிரிவுகளின் 73 வீதமான இடத்தை கொரோனா தொற்றாளர்கள் ஆக்கிரமித்திருக்கும் நிலையில் அந்நாடு நெருக்கடியான சூழலுக்கு முகம்கொடுத்துள்ளது.

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த வெள்ளிக்கிழமை அங்கு வைரஸ் தொற்று தொடர்பான நாடாளாவிய முடக்கம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. எனினும் அது பலன் தர இரண்டு வாரங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.  

உலகில் ஐந்தாவது மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் பிரான்ஸில் மொத்த நோய்த்தொற்று சம்பவங்கள் 1,502,763 ஆக அதிகரித்திருப்பதோடு உலகில் ஏழாவது அதிகூடிய எண்ணிக்கையாக 38,289 பேர் உயிரிழந்துள்ளனர்.

Thu, 11/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை