பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து உத்தியோகபூர்வமாக அமெ. விலகல்

மூன்று ஆண்டுகள் தாமதத்திற்குப் பின் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து உலகில் முதல் நாடாக அமெரிக்க நேற்று விலகியது.

அந்த உடன்படிக்கையில் இருந்து விலகும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டே வெளியிட்டபோதும், ஐ.நா ஒழுங்குமுறைகளுக்கு அமைய நேற்றே இந்த முடிவு அமுலுக்கு வந்தது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் இந்த உடன்படிக்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது.

காலநிலை மாற்ற அச்சுறுத்தலை கையாள்வதில் சர்வதேச அளவிலான ஒரு நடவடிக்கையாகவே 2015 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கை எட்டப்பட்டது.

இந்த நூற்றாண்டில் உலக வெப்பநிலை உயர்வதை கட்டுப்படுத்துவது மற்றும் வெப்பநிலை 1.5 பாகையை விட அதிகரிக்காது கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு உலக நாடுகளுக்கு இடையே இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.

உலகளாவிய பசுமையில்ல வாயுக்கள் உமிழ்வில் 15 வீதத்தை கொண்டிருக்கும் அமெரிக்கா உலகின் சக்திவாய்ந்த பொருளாதாரமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே அமெரிக்கா விலகியதால் பாரிஸ் உடன்படிக்கையை செயற்படுத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.

Thu, 11/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை