ஐ.பி.எல் ப்ளே - ஓப் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் 13ஆவது பருவகாலத்திற்கான லீக் போட்டிகள் தற்சமயம் ஐக்கிய அரபு இராட்சியத்தின் மூன்று மைதானங்களில் நடைபெற்றுவரும் நிலையில், அதன் அடுத்த சுற்றான ப்ளே-ஓப் சுற்றுப் போட்டி அட்டவணை சற்று முன்னர் (25) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் (பி.சி.சி.ஐ) வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த தொடரின் 56 லீக் போட்டிகளுக்குமான போட்டி அட்டவணை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்டிருந்தது.

தற்சமயம் நடைபெற்றுவரும் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்சமயம் 45 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மொத்த 56 லீக் போட்டிகளில் இன்னும் 11 லீக் போட்டிகள் மாத்திரம் எஞ்சியுள்ள நிலையில் தற்போது ப்ளே-ஓப் சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி ஷார்ஜாவில் நடைபெறும் சன்ரைஸஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைகின்றன. வெளியிடப்பட்டுள்ள ப்ளே-ஓப் சுற்றுக்கான போட்டி அட்டவணையின் படி இறுதிப் போட்டியானது நவம்பர் 10ஆம் திகதி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

டுபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று மைதானங்களில் லீக் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், ப்ளே-ஓப் போட்டிகளானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் தவிர்ந்த ஏனைய இரண்டு மைதானங்களிலும் நடைபெறவுள்ளன.

சர்வதேச போட்டிகளை மீள ஆரம்பிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

ப்ளேஓப் சுற்றுப் போட்டி அட்டவணை. (அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும்)

தெரிவுப் போட்டி 1 | 5 நவம்பர் – புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி எதிர் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பெறும் அணி – டுபாய்

எலிமினேட்டர் | 6 நவம்பர் – புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடம் பெறும் அணி எதிர் புள்ளிப்பட்டியலில் நான்காமிடம் பெறும் அணி – அபுதாபி

தெரிவுப் போட்டி 2 | 8 நவம்பர் – எலிமினேட்டர் இல் வெற்றி பெற்ற அணி எதிர் தெரிவுப் போட்டி 1 இல் தோல்வியுற்ற அணி – அபுதாபி

இறுதிப்போட்டி | 10 நவம்பர் – 1 இல்வெற்றி பெற்ற அணி எதிர் தெரிவுப் போட்டி 2 இல் வெற்றி பெற்ற அணி – டுபாய்.

Tue, 10/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை