இந்திய கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய பயணம்: ஒரு நாள், 20 ஓவர் போட்டி அட்டவணை

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை சிட்னியிலும், 3-வது ஆட்டத்தை கன்பெர்ராவிலும் விளையாடுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதையொட்டி வீரர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது தொடர்பாக சிட்னி நகரை உள்ளடக்கிய நியூசவுத்வேல்ஸ் மாகாண அரசுக்கும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்படி ஐ.பி.எல். முடிந்ததும் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படும் இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு நடைமுறையாக சிட்னியில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதே போல் அவுஸ்திரேலிய வீரர்களும் சிட்னியில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வார்கள். அச்சமயம் அருகில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்ததும் அதிகாரபூர்வ போட்டி அட்டவணை வெளியாகும்.

உத்தேச பட்டியலின்படி இந்திய அணி நவம்பர் 27, 29-ம் திகதிகளில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை சிட்னியிலும், டிசம்பர் 1ம் திகதி 3-வது ஆட்டத்தை கன்பெர்ராவிலும் விளையாடுகிறது. இவ்விரு நகரங்களிலேயே டிச.4, 6, 8-ம் திகதிகளில் 20 ஓவர் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக டிச.17 முதல் 21-ம் திகதி வரை அடிலெய்டில் நடக்கிறது. தொடர்ந்து மெல்போர்ன் (டிச.26--30), சிட்னி (ஜன.7-11), பிரிஸ்பேன் (ஜன.15--19) ஆகிய நகரங்களிலும் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

Tue, 10/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை