ஸ்பெயின் தலைநகரில் முடக்க நிலை அமுல்

கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் மோசமாக அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் மெட்ரிட் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் முடக்க நிலை ஒன்றுக்கு ஸ்பெயின் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாட்டின் கீழ் அத்தியாவசிய பயணங்கள் அன்றி குடியிருப்பாளர்கள் வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த முடக்கநிலை சட்ட ரீதியாக செல்லுபடியாகாது என்று மெட்ரிட்டின் பிராந்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் ஸ்பெயினில் பதிவான 133,604 நோய்த் தொற்று சம்பவங்களில் மெட்ரிட்டில் மாத்திரம் மூன்றில் ஒன்றை விடவும் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும் சுகாதார பராமரிப்பில் அதிகாரத்தை பெற்றிருக்கும் ஸ்பெயின் பிராந்திய அரசுகள் கட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு ஆதரவாக கடந்த புதன்கிழமை வாக்களித்தன.

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை