டிரம்ப்–பைடன் விவாதத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதத்தை மேலும் ஒழுங்கு முறையாக நடத்துவதற்கு அதன் வடிவத்தை மாற்ற அது தொடர்பில் கண்காணிக்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொல்ட் டிரம்ப் மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பைடன் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதம் காரசாரமாக அமைந்ததோடு இருவரும் மோசமான வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்தினர். விவாதத்தில் ஒருவருக்கு ஒருவர் இடையூறு செய்யும்போது ஒலிவாங்கியை செயலிழக்கச் செய்ய இந்த புதிய நடவடிக்கையில் வகை செய்யப்பட்டுள்ளது. பைடன் பேசிக்கொண்டிருந்தபோது டிரம்ப் பலமுறை குறுக்கிட்டுப் பேசினார். அதனால் யார் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதில் கடுமையான குழப்பம் நிலவியது.

ஆணைக்குழுவின் இந்தத் திட்டத்தை டிரம்ப்பின் பிரசாரக் குழு ஏற்கனவே விமர்சித்துள்ளது. டிரம்ப் மற்றும் பைடன் இடையே இடம்பெற்ற முதலாவது விவாதத்தின் போக்கு மற்றும் மூலோபாயம் பற்றி அமெரிக்கா மற்றும் உலகெங்கம் விமர்சனங்கள் எழுந்தன.

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை